ஈரோட்டில் பரபரப்பு ரெயில்நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ஈரோட்டில் பரபரப்பு  ரெயில்நிலையம் உள்பட 3 இடங்களுக்கு  வெடிகுண்டு மிரட்டல்
x

ஈரோட்டில் ரெயில்நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோட்டில் ரெயில்நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஈரோட்டில் பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இந்த 3 இடங்களிலும் குண்டு வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுகுறித்து சென்னை போலீசார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார்படுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார், ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடை பகுதிகளிலும், ஈரோடு வழியாக சென்ற ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.

தீவிர விசாரணை

எனினும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. சந்தேகத்துக்கு உரிய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கேட்பாரின்றி கிடக்கும் பொருட்களை தொடக் கூடாது என பயணிகளுக்கும், ரெயில்வே ஊழியர்களுக்கும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, 'ஈரோடு ரெயில், பஸ் நிலையங்கள் உட்பட 3 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டறியப் படவில்லை. அதேசமயம் மிரட்டல் விடுத்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றோம்' என்றனர்.


Related Tags :
Next Story