கிருஷ்ணகிரிக்கு 25-ந்தேதி வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கிருஷ்ணகிரிக்கு 25-ந்தேதி வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பர்கூர் அடுத்த ஜெகதேவியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்டத்துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொருளாளர் கதிரவன், முன்னாள் எம்.பி.க்கள் வெற்றிச்செல்வன், சுகவனம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கிருபாகரன், செந்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், அஸ்லம், நாகராசன், கோதண்டன், சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர் நவாப், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தினேஷ், துணை அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அண்ணா பிறந்தநாளில் தமிழகத்தின் முன்னோடி திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிப்பது, தி.மு.க, இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையின் போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story