செயற்குழு கூட்டம்
செயற்குழு கூட்டம்
மதுரை
தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர், வத்தல் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் விஜிஸ் முன்னிலை வைத்தார். வருகிற 13-ந்தேதி நடைபெற இருக்கும் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வைக்கவும், சென்னையில் இது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், செயற்குழுவை மாற்றி அமைக்கப்பட வேண்டும், வெளி மாவட்டத்தில் இருக்கும் சங்க உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், பொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story