மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் கண்காட்சி
கோவில்பட்டி மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் கண்காட்சி நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி வித்யா பிரகாசம் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியின் 20-ம் ஆண்டு தொடக்க விழாவும், தொழில் பயிற்சிக்கான கண்காட்சியும் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து குத்து விளக்கு ஏற்றினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரசபை தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான கருணாநிதி, உதவி கலெக்டர் மகாலட்சுமி, பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தாசில்தார் சுசீலா, பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமார், மேலாளர் முத்துப்பாண்டி, மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொணடனர். பள்ளி முதல்வர் தலைமை ஆசிரியர் ஐடா நன்றி கூறினார்
Related Tags :
Next Story