விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி


விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி
x

விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி 13-ந் தேதி திறக்கப்படுகிறது

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோரம் அமைந்துள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த ஆண்டு நடத்திய முதலாம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை உள்பட 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதிலும் 250-க்கும் மேற்பட்ட பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொல்பொருட்களை பார்வையிட்டு தொன்மையான மனிதர்களின் வரலாற்றை அறியும் வகையில் தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி தளத்தில் காட்சிப்படுத்துவதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி திறப்பு விழா வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. கண்காட்சியினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைக்க உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


Next Story