அரசு துறைகளின் கண்காட்சி


அரசு துறைகளின் கண்காட்சி
x

அரசு துறைகளின் கண்காட்சியை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நீதித்துறை (மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு), வருவாய்த்துறை, காவல்துறை (குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு), பொது சுகாதாரத்துறை, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், மாவட்ட காசநோய் மையம், தொழுநோய் பிரிவு, மகளிர் திட்டம் உள்பட 18 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய்பிரியா கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:- பல்வேறு அரசுத்துறைகள் மூலம் அரங்குகள் அமைத்து, செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு அந்தந்த துறை சார்ந்த அலுவலர் மூலம் செயல் விளக்கம் அளிப்பதுடன், கையேடுகளும் வினியோகிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இதில், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 சத்தியநாராயணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், வக்கீல் சங்க தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story