மத்திய அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சி


மத்திய அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சி
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் மத்திய அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்

விழுப்புரம்

மயிலம்

விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் 72-வது பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் மத்திய அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சி திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஏ.டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மீனாட்சிநித்யசுந்தர் வரவேற்றார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இதில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத், செயலாளர் வினோத் பி.செல்வம், செய்தி தொடர்பாளர் ஆதவன், திறன் மற்றும் மேம்பாட்டு அணி செயலாளர் அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் அசோக்குமார், கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வி.ஏ.டி.கலிவரதன், விழுப்புரம் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாண்டியன், ராமஜெயக்குமார், சத்தியநாராயணன், ராஜன், பொருளாளர் சுகுமார், அரசின் நலத்திட்ட அணி பிரிவு தலைவர் ஆனந்தகுமார், துணை தலைவர்கள் முத்துலட்சுமி, வசந்திமுருகேசன், சந்திரலேகாபிரபாகரன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சக்திவேல், குப்பன், ஒன்றிய பொறுப்பாளர் சந்திரலேகாவிஜயன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சீனுவாசன், மயிலம் கிழக்கு ஒன்றிய தலைவர் அசோகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story