பாரம்பரிய பயிர் ரகங்கள் குறித்த கண்காட்சி
ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடியில் வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய பயிர் ரகங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
பனைக்குளம்
ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடியில் வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய பயிர் ரகங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
கண்காட்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு பண்புகளை கொண்ட பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக குயவன்குடியில் நடைபெற்றது. திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் வரவேற்று பேசினார்.
கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கு வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா முன்னிலை வகித்தார். அப்போது அவர் பாரம்பரியமிக்க நெல், சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை எனவும், சில ரகங்கள் நோய்களை குணப்படுத்தவும், சில ரகங்கள் வறட்சியை தாங்கி வளருவதாகவும் தெரிவித்தார்.
நீர் பாசனம்
நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், வேளாண்மை துணை இயக்குனர்கள் பாஸ்கரமணியன், மூர்த்தி, வேளாண்மை விற்பனை குழு செயலாளர் ராஜா, தோட்டக்கலை துணை இயக்குனர் நாகராஜன், இணை பேராசிரியர்கள் அருணாச்சலம், பாலசுப்பிரமணியம், இளஞ்செழியன், உதவி பேராசிரியர்கள் பாலாஜி, சுந்தர், சிவக்குமார் ஆகியோர் பேசினர்.
இதில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தல், சிறுதானியங்கள் பயிரிடல், அரசு மானியம், சந்தைப்படுத்துதல், சொட்டு நீர் பாசனம், உரமிடுதல், மருந்து தெளித்தல், பூச்சிகளை கட்டுப்படுத்துதல் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் முறை போன்றவை குறித்து விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, வட்டார அட்மா திட்ட சேர்மன்கள் மண்டபம் தவுபீக் அலி, திருப்புல்லாணி நாகேசுவரன், அனைத்து வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.