பாலாற்றில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்து கழிவுகள்


பாலாற்றில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்து கழிவுகள்
x

பாலாற்றில் காலாவதியான மருந்து கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாற்றில் குடிநீர் கிணறு, தண்ணீர் ஏற்றும் நிலையத்திற்கு அருகில் காலாவதியான மருந்து கழிவுகள், பாட்டில்கள் போன்றவை ஆங்காங்கே குவியல் குவியலாகக் கொட்டப்பட்டுள்ளன. காலாவதியாகி கெட்டுப்போன இந்த பாட்டில்கள் மேலும் வெயிலில் சூடேறி வெடித்து அவை மண்ணுக்கு உள்ளே சென்று குடிநீரில் கலந்து நஞ்சாகும் அபாயம் உள்ளது.

ஆற்றில் மருந்து கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கொட்டப்பட்டிருக்கும் அனைத்து பாட்டில்களையும் அகற்றி, பாலாறு மாசு அடையாமல் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story