வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் தீத்தடுப்பு செயல் விளக்கம்


வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் தீத்தடுப்பு செயல் விளக்கம்
x

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் தீத்தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்டு பணிகள் துறையின் சார்பில் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் தீத்தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கரிகாலன் தலைமையிலான வீரர்கள் தீத்தடுப்பு சாதனங்களை கையாளும் விதம் குறித்தும், குடியிருப்புகள் மற்றும் பணிபுரியும் இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பாக வெளியேறுவது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மணிமேகலை, பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


Next Story