அரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு செயல் விளக்கம்
ஆரணி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆரணி
ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆரணி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழு சார்பில் மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்து செயல்விளக்க பயிற்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சீ.தனஞ்செழியன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் இளையராஜா வரவேற்றார்.
ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தீ விபத்திலிருந்து மாணவர்கள் தற்காத்துக் கொள்வது குறித்தும் தீ விபத்து ஏற்பட்டால் நாம் செய்ய வேண்டியது மற்றும் செய்யக் கூடாதவை குறித்தும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார்.
தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் படைவீரர்கள், தன்னார்வலர் லோகேஷ் உள்ளிட்ட குழுவினர் மாணவர்களுக்கு தீ விபத்து பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கினர்.
இதில் ஆசிரியர்கள் விஜய், சீனிவாசன், பாண்டியன், ராஜா, அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.