முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
திருப்பூர்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காங்கயம்- தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 1971-ம் ஆண்டில் படித்து முடித்த மாணவ, மாணவிகள் கடந்த 51 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கயம் நகரம் சத்யா நகர் பகுதியில் உள்ள ஒரு அரங்கத்தில் முன்னாள் சந்தித்துக்கொண்டனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடனும், பேரன், பேத்திகளுடனும் வந்து விழாவில் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்து நலம் விசாரித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ, மாணவிகள் கூறும்போது " நாங்கள் படித்த காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியின் அன்றைய ஆசிரிய, ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியரையும், நினைவில் கொண்டு, எங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டிய எங்கள் அறிவுக்கண்ணை திறந்து வைத்த ஆசிரியப் பெருமக்களுக்கு நினைவு கூர்ந்து நன்றியினை தெரிவித்தோம்.

மேலும் நாங்கள் படித்த பள்ளிக்கு எங்களால் முடிந்த அளவு சிறிய தொகையினை நினைவு பரிசாக வழங்க உள்ளோம். இந்த சந்திப்பு என்பது எங்கள் வாழக்கையில் கிடைத்த அறிய வாய்ப்பாக அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்.

இருப்பினும் இந்த சந்திப்பு எங்களின் மனதில் பழைய நினைவுகளின் தாக்கமும், கண்களில் நீரும் வரவழைத்தது என்றனர்.


Next Story