வடபாதிமங்கலம் பஸ் நிலையத்தில் சாலை அகலப்படுத்தப்படுமா?


வடபாதிமங்கலம் பஸ் நிலையத்தில் சாலை அகலப்படுத்தப்படுமா?
x

வடபாதிமங்கலம் பஸ் நிலையத்தில் சாலை அகலப்படுத்தப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பாா்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

வடபாதிமங்கலம் பஸ் நிலையத்தில் சாலை அகலப்படுத்தப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பாா்த்து உள்ளனர்.

வடபாதிமங்கலம் பஸ் நிலையம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்தில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, குடவாசல், மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, எட்டுக்குடி, கோட்டூர் போன்ற ஊர்களுக்கும், பிற கிராமங்களுக்கும் சென்று வரக்கூடிய வகையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அகலமான சாலை

இருப்பினும் பஸ் நிலையத்தில் பஸ்கள் வசதியாக நிற்பதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் பஸ்கள் நிற்கும் இடங்கள் கூட தெரியாமல் நிறுத்தப்படும் இடங்கள் அமைந்துள்ளது. இதனால், பயணிகள் பஸ்களை கண்டு பிடித்து ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். மேலும், பஸ் நிலைய நுழைவு வாயிலில் இருந்து வெளிவாயில் வரை சாலை மிகவும் குறுகலாகவும், இடையூறாகவும் உள்ளது.இதனால், பஸ்கள் மற்றும் பிற வாகனங்களை ஓட்டிச் சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, வடபாதிமங்கலம் பஸ் நிலையத்தில் பஸ் நிற்பதற்கு வசதியாக இடவசதியை ஏற்படுத்தி தருவதுடன், குறுகலான சாலையை அகலமான சாலையாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story