கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை நீட்டிப்பு


கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 17 Sept 2023 5:00 AM IST (Updated: 17 Sept 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

யானைகள் நடமாட்டம் எதிரொலியாக கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தொடர்விடுமுறை எதிரொலியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். இவர்கள் அங்குள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டுகளித்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவோர், அங்குள்ள பேரிஜம் ஏரியையும் கண்டுகளித்து வருகின்றனர். வனத்துறையினரின் அனுமதி பெற்று சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வேண்டும்.

இந்தநிலையில் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்லும் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பேரிஜம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மலைப்பாதையில் யானைகள் உலா வருவதை கண்டனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு மேலும் தடை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று பேரிஜம் ஏரிக்கு செல்ல வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பேரிஜம் ஏரிக்கு செல்லும் மலைப்பாதையில் 4 யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 8 நாட்களாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் குறைந்த பிறகே சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.


Related Tags :
Next Story