எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு


எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு
x

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் பயணிகளில் வரவேற்பை தொடர்ந்து ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06035) செப்டம்பர் 23-ம் தேதி வரை சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்று அடையும்.

மறுமார்க்கமாக வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06036) செப்டம்பர் 24-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என்று திருச்சி ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


Next Story