ஹூப்ளி- தஞ்சாவூர் ரெயில் சேவை நீட்டிப்பு


ஹூப்ளி- தஞ்சாவூர் ரெயில் சேவை நீட்டிப்பு
x
சேலம்

சூரமங்கலம்:-

ெரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தஞ்சாவூருக்கும், தஞ்சாவூரில் இருந்து ஹூப்ளிக்கும் சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ெரயில்களின் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ெரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஹூப்ளி- தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ெரயில் (07325) சேவை அடுத்த மாதம் (ஜூன்) 26-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ெரயில் ஹூப்ளியில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு கரூர் வழியாக மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் தஞ்சாவூர்- ஹூப்ளி சிறப்பு ெரயில் (07326) சேவை அடுத்த மாதம் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ெரயில் தஞ்சாவூரில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு கரூர் வழியாக இரவு 11.45 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ெரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story