கடலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு; மண்டல இணைப்பதிவாளர் தகவல்


கடலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில்   பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு; மண்டல இணைப்பதிவாளர் தகவல்
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர்

கடலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூரில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர்.கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை இணையவழி மூலம் விண்ணப்பிக்க தவறியவர்கள் வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே விருப்பம் உள்ளவர்கள் டாக்டர்.எம்.ஜி.ஆர்.கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் அணுகி விண்ணப்ப கட்டணம் ரூ.200-ஐ இணையதளம் மூலம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பயிற்சியில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2023 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி முழுநேரம் பயிற்சி காலம் ஒரு ஆண்டு (இரு பருவமுறைகள்) மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.18 ஆயிரத்து 850 ஆகும். தகுதியுள்ளவர்கள் அனைத்து கல்வி அசல் சான்றிதழ்களுடன் பயிற்சி பெறுபவர் மற்றும் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் விபரங்களுக்கு முதல்வர், டாக்டர் எம்.ஜி.ஆர்.கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.3, கடற்கரை சாலை, சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகம், கடலூர்-1(தொலைபேசி எண் 04142-222619) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story