திருச்சி-ஆமதாபாத் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு


திருச்சி-ஆமதாபாத் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
x

வாராந்திர சிறப்பு ரெயில் சேவையை மேலும் 5 வாரங்கள் நீட்டிப்பு செய்து மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி,

திருச்சி-ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவையை மேலும் 5 வாரங்கள் நீட்டிப்பு செய்து மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை தோறும் ஆமதாபாத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் ஆமதாபாத்-திருச்சி வாரந்திர சிறப்பு ரெயில் (எண்:09419) நேற்று மற்றும் வருகிற 8-ந்தேதி, 15-ந்தேதி, 22-ந்தேதி மற்றும் 29-ந்தேதி ஆகிய நாட்களில் இயங்கும். இந்த ரெயில் சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை தோறும் திருச்சியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் திருச்சி-ஆமதாபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:09420) நாளை (ஞாயிற்றுக்கிழமை), 11-ந்தேதி, 18-ந்தேதி, 25-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி ஆகிய நாட்களில் இயங்கும். இந்த ரெயில் திங்கட்கிழமை இரவு 9.15 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். இந்த ரெயில்களின் புறப்படும் நேரம், நிறுத்தங்கள் மற்றும் பெட்டிகளின் இணைப்புகளில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story