முதியவரிடம் பணம் பறிப்பு


முதியவரிடம் பணம் பறிப்பு
x

முதியவரிடம் பணம் பறிக்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

பரமக்குடி தாலுகா கண்டாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). இவர் தனது தாயை பார்ப்பதற்காக சீனிக்காரரேந்தல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரை வழிமறித்து நகையை தரும் படி கேட்டனர். பின்னர் அவர்கள் பாண்டியை கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்த செல்போன், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story