விக்கிரவாண்டியில் துணிகரம் கொத்தனாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம்-செல்போன் பறிப்பு மர்மநபர்கள் 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


விக்கிரவாண்டியில் துணிகரம்    கொத்தனாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம்-செல்போன் பறிப்பு    மர்மநபர்கள் 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

விக்கிரவாண்டியில் கொத்தனாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம்-செல்போனை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி, -

விக்கிரவாண்டி உஸ்மான் நகரை சேர்ந்தவர் சேக்உசேன் (வயது 54). கொத்தனாரான இவர் நேற்று இரவு விழுப்புரத்தில் கட்டிட வேலையை முடித்து விட்டு தனது மொபட்டில் விக்கிரவாண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அடுத்த சுடுகாடு ரோட்டில் வராகநதி பாலம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்நபர்கள் 3 பேர் திடீரென சேக் உசேனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.ஆயிரம் ரொக்கம், செல்போன் மற்றும் அவருடைய மொபட்டை பறித்துக் கொண்டு, அவரை பள்ளத்தில் தள்ளிவிட்டு, அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து, பணம், செல்போன், மொபட்டை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story