காய்கறி வியாபாரியிடம் பணம் பறிப்பு
காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி வ.உ.சி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமபாண்டியன். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று ராம பாண்டியன் உ.சிறுவயல் சாலை அருகே வியாபாரம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ராமபாண்டியனிடம் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி ரூ.200-ஐ பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரைக்குடி காந்திபுரத்தை சேர்ந்த சூர்யா (வயது 23), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் (27), தமிழவன்(20) ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story