நிதி நிறுவன உரிமையாளரிடம் கூகுள்பே மூலம் ரூ.75 ஆயிரம் பறிப்பு


நிதி நிறுவன உரிமையாளரிடம்          கூகுள்பே மூலம் ரூ.75 ஆயிரம் பறிப்பு
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காரில் லிப்ட் கேட்டு நிதி நிறுவன உரிமையாளரிடம் கூகுள்பே மூலம் ரூ.75 ஆயிரம் பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

காரில் லிப்ட் கேட்டு நிதி நிறுவன உரிமையாளரிடம் கூகுள்பே மூலம் ரூ.75 ஆயிரம் பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

காரில் லிப்ட் கேட்ட நபர்

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 57), நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் இவர் தனது காரில் பார்வதிபுரத்தில் இருந்து பூதப்பாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். வடசேரி அண்ணா சிலை அருகே வந்த போது ஒரு வாலிபர் லிப்ட் கேட்டு காரை நிறுத்தினார். பின்னர் தாழக்குடி செல்ல வேண்டும் என அவர் கேட்டார்.

உடனே சந்தோஷ் அந்த வாலிபரை காரில் ஏற்றி கொண்டார். தொடர்ந்து புத்தேரி வழியாக பூதப்பாண்டிக்கு செல்லும் சாலையில் திரும்பி சென்றபோது திடீரென 4 பேர் காரை வழிமறித்தனர்.

நகை, பணம் பறிப்பு

காரை நிறுத்தியதும் அந்த கும்பல் சந்தோசை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்தனர்.

அத்துடன் கூகுள்பே மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரத்தையும் திருடினர். பின்னர் அந்த கும்பலும், காரில் லிப்ட் கேட்டு வந்த வாலிபரும் அங்கிருந்து தப்பி சென்றனர். லிப்ட் கேட்டு வந்த வாலிபர் தான் திட்டமிட்டு கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து காரை ஓட்டி வந்த சந்தோஷ் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்காணிப்பு கேமரா காட்சி

பின்னர் போலீசார் வடசேரி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குமரியில் சமீப காலமாக நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 2 தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் நெசவாளர் காலனியில் காவி உடை அணிந்து வந்த மர்ம நபர் வீட்டில் தனியாக இருந்த முதியவரிடம் ேதாஷம் நீக்குவதாக கூறி ரூ.14 ஆயிரம் பறித்து சென்றார். இந்த நிலையில் காரில் லிப்ட் கேட்டு வந்து நகை, பணம் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story