வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு
வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு
திங்கள்சந்தை:
நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் சம்பவத்தன்று பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காட்டில் ஒரு டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பள்ளவிளையை சேர்ந்த பிரகாஷ், பெருவிளையை சேர்ந்த நிஷாந்த் ஆகியோர் சுரேசை தகாத வார்த்தைகளால் பேசி மது குடிக்க பணம் கேட்டனர்.
அவர் பணம் இல்லை என்றதும் பிரகாஷ் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து சுரேசின் கழுத்தில் வைத்து மிரட்டினார். தொடர்ந்து நிஷாந்த், அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு இருவரும் சுரேசின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுரேஷ் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ், நிஷாந்த் ஆகிேயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.