"பெண்கள் 'பியூட்டிஃபுல்' லா இருந்தாதான்.. கூடுதல் சம்பளம் கிடைக்கும்..!"எம்எல்ஏ பேச்சால் சலசலப்பு
ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே வேலை என்றும், தகுதியுடைய பெண்களுக்கு என்றும் வேலை கிடையாது
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கான கல்லூரி கனவு என்ற தலைப்பில் உயர்க்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட வேடசந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் மாணவர்களிடையே பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய காந்திராஜன்,
"ஆங்கிலத்தை சரளமாக பேசுபவர்களுக்கு மட்டுமே அந்நிய நிறுவனங்களில் வேலைக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதிலும் பெண்களாக இருந்தால் அழகு முக்கியம், அழகான ஹேண்ட்சம்முடன் இருக்கும் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்" என்று பேசினார். இதனால் நிகழ்ச்சியில் கூடியிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே வேலை என்றும், தகுதியுடைய பெண்களுக்கு என்றும் வேலை கிடையாது. அழகு இருந்தால் மட்டுமே போதும் வேலை கிடைத்து விடும், அதிகமாக சம்பாதித்து விடலாம் என்ற ரீதியில் பேசிய பேச்சால் நிகழ்ச்சியில் பேசியதால் அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.