கண் பரிசோதனை முகாம்
தென்காசியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
தென்காசியில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா 104-வது நிறுவன தொடக்க விழாவை முன்னிட்டு தென்காசி ஜி.வி.ஆர். கண் மருத்துவமனை மற்றும் தென்காசி கிளை யூனியன் பங்க் ஆப் இந்தியா இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. தென்காசி கிளை மேலாளர் செல்வ சீராளன் தலைமை தாங்கினார். டாக்டர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து டாக்டர் கணேசன், தொழிலதிபர் பென்சமின் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும், ஆய்க்குடி ஜே.பி. பொறியியல் கல்லூரி மாணவர்கள் அலைபேசிகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் வங்கி பண பரிவர்த்தனையில் நடைபெறும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை வங்கி வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நடத்தி வாடிக்கையாளர்களின் பாராட்டினை பெற்றனர்.
மத்திய அரசு திட்டமான பிரதமர் ஸ்வநிதி திட்டம் மூலம் சிறு தொழில் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தலா 10 நபர்களுக்கு கடனுதவி திட்டமும், விவசாயக் கடனுதவியாக தலா 2 நபர்களுக்கும், தலா இரண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி உட்பட ரூ.10 லட்சம் மதிப்பில் வங்கி மேலாளர் செல்வ சீராளன் தலைமையில், ரூரல் டெவலப்மெண்ட் அலுவலர் கார்த்திக் முன்னிலையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.