கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்


கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்
x

திருவோணம் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு வாலிபரின் மண்டை உடைந்தது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

திருவோணத்தை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன்கோவில் திருவிழா தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளில் நம்பிவயல் கிராமத்தை சேர்ந்த இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. அப்போது ஒரு தரப்பினர் நம்பிவயல் கிராமத்தைச்சேர்ந்த சிவக்குமார் மகன் பாலக்குமார் (வயது26) என்பவரை கட்டையால் தலையில் தாக்கினர். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த பாலக்குமார் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து பாலகுமாரின் உறவினர் முருகேசன் (43) கொடுத்த புகாரின் பேரில் நம்பிவயல் கிராமத்தை சேர்ந்த குமணன், யோகேஷ், அறிவு, ரஞ்சித், நிஷாந்த், கார்த்திக், திருமுருகன், மணி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story