கோஷ்டி மோதல்; 7 பேர் மீது வழக்கு


கோஷ்டி மோதல்; 7 பேர் மீது வழக்கு
x

கோஷ்டி மோதல்; 7 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர்

தஞ்சை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்விரோதம்

தஞ்சை அருகே உள்ள சக்கரசாமந்தம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 78). அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (48).

இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக சம்பவத்தன்று பழனிசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

7 பேர் மீது வழக்கு

இதுகுறித்து பழனிசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் தனி தனியாக கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் இருதரப்பினரை சேர்ந்த 7 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story