தொழிற்சாலையில் தீ விபத்து


தொழிற்சாலையில் தீ விபத்து
x

சாத்தூர் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

சாத்தூர்

சாத்தூர் அருகே போக்குவரத்து நகரில் சித்துராஜபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவருக்கு சொந்தமான ராயல் கோல்ட் என்டர்பிரைசஸ் என்ற மரத்தூள் கரித்துண்டு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு மரத்துகள்களை துண்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான தொழிற்சாலை எந்திரங்கள் தப்பின. இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story