மறுதேர்வில் மீண்டும் தோல்வி: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


மறுதேர்வில் மீண்டும் தோல்வி:   பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

புதுப்பேட்டை அருகே மறுதேர்வு எழுதிய மாணவி மீண்டும் தோல்வியை சந்தித்ததால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள அழகு பெருமாள்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் ரஷியா (வயது 17). ஒறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த அரசு பொது தேர்வில் இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் அவர் தேர்ச்சி பெறவில்லை.

இதன் பின்னர் மீண்டும் மறுதேர்வு முறையில் 2 பாடத்துக்கும் தேர்வு எழுதினார். இதன் முடிவு தற்போது வெளியானது. இதில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற அவர், இயற்பியல் பாடத்தில் மீண்டும் தோல்வியை சந்தித்தார்.

தற்கொலை

இதனால், ரஷியா மன வேதனையில் இருந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ரஷியா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story