பிளஸ்-1 தேர்வில் 3 பாடங்களில் தோல்வி; மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
பிளஸ்-1 தேர்வில் 3 பாடங்களில் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புழல்,
சென்னையை அடுத்த புழல் புத்தகரம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(வயது 16). இவர், சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் மாணவன் கார்த்திக், 3 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று காலை அவரது பெற்றோர் எலுமிச்சை பழம் வியாபாரத்துக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த கார்த்திக், படுக்கை அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்த அவரது பெற்றோர், தங்கள் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.