கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் வீடு, நிறுவனங்களுக்கு அபராதம்


கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் வீடு, நிறுவனங்களுக்கு அபராதம்
x

கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் வீடு, நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

திருப்பூர்


கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் வீடு, நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

குடிநீரை காய்ச்சி குடியுங்கள்

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 8-வது வார்டு மும்மூர்த்திநகர், கருப்பராயன்நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் 4-வது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் தூய்மைப்பணிகளை மேயர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். மண்டல தலைவர் கோவிந்தராஜ், கவுன்சிலர் வேலம்மாள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

ஆய்வு குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் மற்றும் கொசுக்களால் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். வீட்டில் சேமித்து வைக்கும் தண்ணீர் பாத்திரங்களை வாரம் ஒருமுறை சோப்பு அல்லது பிளீச்சிங் பவுடர் போன்ற கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களில் காற்று புகாதவாறு மூடி போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

அபராதம்

வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் தேவையற்ற பொருட்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வணிக வளாகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் மழைநீர் தேங்காதவகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வரும்போது உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நோய் பரப்பும் வகையில் சுகாதாரமற்ற முறையில் கொசுப்புழு உற்பத்தி ஆகும் இடங்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வீடுகள், நிறுவனங்களுக்கு மாநகராட்சி மூலமாக பொது சுகாதாரப்பிரிவு சட்டப்பிரிவின் கீழ் அறிவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவறும்பட்சத்தில் உரிய அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story