கள்ளக்குறிச்சியில் போலியாக இயங்கி வந்த வங்கி மூடல் - போலீசார் அதிரடி நடவடிக்கை


கள்ளக்குறிச்சியில் போலியாக இயங்கி வந்த வங்கி மூடல் - போலீசார் அதிரடி நடவடிக்கை
x

போலி வங்கிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையை தொடர்ந்து, போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் 8 இடங்களில் இயங்கி வந்த போலி வங்கிகளின் ஆவணங்களை கைப்பற்றி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அனுமதி பெறாமல் போலியாக வங்கிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சாலையில் போலி வங்கி இயங்கி வருவது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், வங்கியின் ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட வங்கி மூடப்பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story