ஏழுமலையான் கோவிலுக்கு போலி தரிசன டிக்கெட்: சேலம் நிறுவனத்தில் திருப்பதி போலீசார் விசாரணை


ஏழுமலையான் கோவிலுக்கு போலி தரிசன டிக்கெட்: சேலம் நிறுவனத்தில் திருப்பதி போலீசார் விசாரணை
x

ஏழுமலையான் கோவிலுக்கு போலி தரிசன டிக்கெட்: கொடுத்த புகாரின் பேரில் சேலம் நிறுவனத்தில் திருப்பதி போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பல மணி நேரம் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டண டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த ஒருவர், தரிசனம் செய்ய திருப்பதிக்கு கட்டண டிக்கெட் கொண்டு சென்றார். அங்கு அதனை பரிசோதனை செய்த போது, அது போலி டிக்கெட் என தெரிய வந்தது. இதுகுறித்து திருமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சேலத்தை சேர்ந்த அந்த பக்தரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் சேலம் 2-வது அக்ரஹாரத்தில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்தில் இருந்து தனக்கு இந்த கட்டண தரிசன டிக்கெட் கொடுத்ததாக கூறினார். இதனால் திருப்பதி திருமலை போலீசார் நேற்று சேலம் வந்து சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரிபவர்களிடம் போலி தரிசன டிக்கெட் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story