போலி டாக்டர் கைது
நன்னிலம் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்
நன்னிலம்:
நன்னிலம் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
மெடிக்கல்
நாகை மாவட்டம் போலகத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது 37). இவர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைகுப்பம் கடைத்தெருவில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.
இவர் மருத்துவம் படிக்காமல், இவரது மெடிக்கலுக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக நன்னிலம் போலீசாருக்கு புகார் வந்தது.
போலி டாக்டர் கைது
அதன்பேரில் போலீசார் செந்திலை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் செந்திலை கைது செய்தனர்.
டாக்டருக்கு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த செந்திலிடம் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story