போலி டாக்டர் கைது


போலி டாக்டர் கைது
x

புதுக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டாார்.

புதுக்கோட்டை

மருத்துவம்

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே ரைஸ்மில் கிராமம் கணேஷ் நகரை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜகோபால் (வயது 44). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் ரைஸ் மில் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தனது வீட்டிலேயே காமாட்சி என்ற பெயரில் மருந்துக்கடையும், அதனுடன் சேர்ந்து அருகிலேயே கிளினிக்கும் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பெருங்கொண்டான்விடுதி கிராம நிர்வாக அலுவலர் அன்பரசனுக்கு கிடைத்த தகவலின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி அவரை கைது செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

போலி டாக்டர் கைது

இதைதொடர்ந்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மை, ராஜகோபாலிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் போலி டாக்டர் என தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் ராஜகோபால் மீது வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story