போலி டாக்டர் கைது


போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2023 2:20 AM IST (Updated: 28 Jun 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் அந்த பகுதியில் அனுமதி பெறாமல் கிளினிக் நடத்தி வந்ததும், அதில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வைத்தியம் பார்த்து வரும் போலி டாக்டர் ரவியை போலீசார் கைது செய்தனர்.


Next Story