போலி இணையதளம் மூலம் மோசடி: பணத்தை இழந்தவரின் வங்கி கணக்கில் ரூ.39 ஆயிரத்து 500 சேர்ப்பு-சேலம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

போலி இணையதளம் மூலம் மோசடி: பணத்தை இழந்தவரின் வங்கி கணக்கில் ரூ.39 ஆயிரத்து 500 சேர்ப்பு-சேலம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
x

போலி இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.39 ஆயிரத்து 500-ஐ ஏமாற்றப்பட்டவரின் வங்கி கணக்கில் மீண்டும் சேர்த்து சேலம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்

சேலம்:

போலி இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.39 ஆயிரத்து 500-ஐ ஏமாற்றப்பட்டவரின் வங்கி கணக்கில் மீண்டும் சேர்த்து சேலம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

குறைந்த விலையில் செல்போன்

சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 35). இவர் புதிதாக செல்போன் வாங்க இணைய தளங்களில் தேடி உள்ளார். அப்போது ஒரு இணைய தளத்தில் ரூ.39 ஆயிரத்து 500-ஐ முன்கூட்டியே கட்டினால் விலை உயர்ந்த செல்போன் குறைந்த விலைக்கு வழங்கப்படும் என்று குறுஞ்செய்தி இருந்தது.

இதை நம்பி அவர் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட இணைய தளத்தில் இருந்த வங்கி எண்ணுக்கு பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் செல்போன் வரவில்லை. பின்னர் இணைய தளத்தில் தேடி பார்த்த போது அது போலி என்றும் பணம் மோசடி நடந்து இருப்பதும் தெரிய வந்தது.

வெளி மாநிலம்

இது குறித்து அவர் சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நவீன் குமார் அனுப்பிய பணம் வெளிமாநிலத்தில் உள்ள ஒருவரது வங்கி கணக்கிற்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கியில் பேசி மோசடி செய்யப்பட்ட ரூ.39 ஆயிரத்து 500-ஐ நவீன்குமார் வங்கி கணக்கில் சைபர் கிரைம் போலீசார் சேர்த்தனர்.

Next Story