தேங்காய் விலை வீழ்ச்சி
தேவூர் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தது
சேலம்
தேவூர்
தேவூர் அருகே சென்றாயனூர், பெரமச்சிபாளையம், கோணக்கழுத்தானூர், ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், பாங்கிகாடு, கோனேரிபட்டி, காணியாளம்பட்டி, செட்டிபட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, காவேரிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் தென்னை தோப்புகளில் தேங்காய் மகசூல் அதிகரிப்பால் கடந்த மாதம் ரூ.15-க்கு விற்ற ஒரு தேங்காய் வீழ்ச்சி அடைந்து தற்போது ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக சென்று மொத்தமாக தேங்காய்களை விலை கொடுத்து வாங்கி லாரிகளில் ஏற்றி சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதற்கிடையே தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story