புளிய மரத்தில் இருந்து தவறிவிழுந்த கிராம நிர்வாக உதவியாளர் பலி


புளிய மரத்தில் இருந்து தவறிவிழுந்த கிராம நிர்வாக உதவியாளர் பலி
x

புளிய மரத்தில் இருந்து தவறிவிழுந்த கிராம நிர்வாக உதவியாளர் பலியானார்.

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் தாலுகா கோனூர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றியவர் தங்கவேல் (வயது 57). இவர் மேட்டூர் அருகே உள்ள மேட்டுதானம்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று காலை சமத்துவபுரம் பகுதியில் உள்ள புளியமரத்தில் தங்கவேல் ஏறி புளியம்பழம் பறிக்க முற்பட்டார். அப்போது மரத்தில் இருந்து தவறி விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கருமலைக்கூடல் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.



Related Tags :
Next Story