கிணற்றில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி


கிணற்றில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி
x

சோளிங்கர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

கிணற்றில் தவறி விழுந்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த எசையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் முரளி (வயது 32), விவசாயி. இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர் தனது நிலத்திற்கு பசு மாட்டை ஓட்டிச்சென்றுள்ளார். அங்கு கிணற்றில் இறங்கி உள்ளார். அப்போது கால்தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் சென்று முரளியை பிணமாக மீட்டனர். சோளிங்கர் போலீசார், உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து முரளியின் தந்தை ரங்கநாதன் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story