தவறி விழுந்த தொழிலாளி சாவு
வெம்பக்கோட்டை அருகே சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
தவறி விழுந்த தொழிலாளி
வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி முதலியார் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் பாலமுனீஸ்வரன் (வயது 22). கட்டிட தொழிலாளி. கங்கர் சேவல் கிராமத்தில் உள்ள சீனிராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சேதமடைந்த கட்டிடத்தை இடிப்பதற்காக ஒப்பந்தக்காரர் நாராயணனுடன் பாலமுனீஸ்வரன் சென்றிருந்தார். அங்கு சேதமடைந்த கட்டிடத்தின் மேலிருந்து இடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பால முனீஸ்வரன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
2 பேர் மீது வழக்கு
அங்கு அவரை பரிேசாதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இதுகுறித்து பாலமுனீஸ்வரனின் தாயார் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சீனி ராஜ், ஒப்பந்தக்காரர் நாராயணன் ஆகிய 2 பேர் மீதும் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.