ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வாய்மேடு:
தலைஞாயிறு வட்டாரத்தில் ஆண்களுக்கான குடும்பகட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பணியில் சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுரையின்படி, தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதலின் படி ஆண்களுக்கான எளிய குடும்பகட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள் அடங்கிய குழுவினர்கள் ஆண்களுக்கான எளிய குடும்பகட்டுப்பாடு குறித்து கிராமம் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதுகுறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன் கூறுகையில், மிகவும் எளிய சிகிச்சை முறை மற்றும் பயிற்சி பெற்ற டாக்டரால் 3 நிமிடங்களில் செய்யப்படுகிறது. இதனை செய்து கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படாது. எப்போதும் போல் கடின உழைப்பையும் மேற்கொள்ளலாம். அளவான குடும்பத்தை அமைத்திட அரசு உதவுவதோடு ஊக்கத்தொகை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகிறது என்றார்.