சேவை குறைபாடு: பிரபல ஆட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் குமரி நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

சேவை குறைபாடு:  பிரபல ஆட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்  குமரி நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x

சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி, பிரபல ஆட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதத்தை விதித்து மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி, பிரபல ஆட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதத்தை விதித்து மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

பிரபல ஆட்டோ நிறுவனம்

குமரி மாவட்டம் மேல மிடாலம் பகுதியை சேர்ந்தவர் டார்வின் (வயது 47), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள பிரபல கம்பெனி ஒன்றில் ஒரு ஆட்டோவை சொந்தமாக வாங்கினார். அந்த ஆட்டோவில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதுபற்றி அந்த கம்பெனிக்கு புகார் தெரிவித்தார். இருப்பினும் அந்த புகார் மீது ஆட்டோ நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை அதற்கான பதிலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த டார்வின் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது.

ரூ.1 லட்சம் அபராதம்

தீர்ப்பில், ஆட்டோ நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட டார்வினுக்கு, சம்பந்தப்பட்ட ஆட்டோ நிறுவனம் புதிய ஆட்டோ ஒன்றை வழங்க வேண்டும். மேலும் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதமும், வழக்கு செலவு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

Next Story