அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மின்விசிறி, டியூப் லைட்
திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மின்விசிறி, டியூப் லைட் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறையில் பயன்படுத்த மின்விசிறி மற்றும் டியூப் லைட் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் சி.அருணகிரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆர்.தண்டபாணி, சி.தன்ராஜ், ஜி.வெங்கடாசலம், என்.பாஸ்கர், ஏ.கலைச்செல்வி ஆகியோர் பள்ளிக்கு மின்விசிறி மற்றும் டியூப் லைட் வழங்கியதற்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஆவின் தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் பள்ளிக்கு 10 மின்விசிறி மற்றும் டியூப்லைட் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் செயலாளர் பாரதி, கே.சி.எழிலரசன், வி.கே.ஆனந்த், ஆர்.ஆர்.மனோகரன், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.