வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வயல் விழா


வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வயல் விழா
x

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வயல் விழா நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் உளுந்து ஆடுதுறை 7 ரகம் குறித்து வயல் விழா மகாதேவப்பட்டினத்தில் கொண்டாடப்பட்டது. வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுனர் வெ. கருணாகரன் ஆடுதுறை 7 உளுந்து ரகம் குறித்து பேசினார். அப்போது அவர், இந்த ரகம் ஆடுதுறை 3 மற்றும் ஆடுதுறை 5 ஆகிய உளுந்து ரகங்களுக்கு மாற்றாக பயிரிடலாம் என்றும் நெல் தரிசில் தெளிப்பதற்கு ஏற்ற மாற்று ரகம் என கூறினார். வயல் விழாவில் மன்னார்குடி வேளாண்மை உதவி இயக்குனர் இளம்பூரணார், வேளாண்மை அலுவலர் ஹரிணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர். வயல் விழாவில் 20- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story