தரிசு நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து கொடுக்கப்படும்


தரிசு நிலங்களில் பண்ணை குட்டைகள்   அமைத்து கொடுக்கப்படும்
x
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் தரிசு நிலங்களில் பண்ணை குட்டை அமைத்து கொடுக்கப்படும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கை, குறைகளை தெரிவித்தனர். அப்போது நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். வெள்ளம்பி ஏரியை தூர்வார வேண்டும். யூரியா தட்டுப்பாட்டினை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் பயிர் காப்பீட்டு திட்டத்தினை இதுவரை அரசு அறிவிக்கவில்லை. உடனடியாக அறிவிக்க வேண்டும்.

கொசஸ்தலை ஆற்றில் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. அதனை தடுக்க வேண்டும் என்றனர்.

பண்ணை குட்டை

அதற்கு பதில் அளித்த கலெக்டர் நெமிலி பேரூராட்சி மூலம் தக்க நடவடிக்கை எடுத்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் நிலங்கள் தரிசு நலமாக இருந்தால் பண்ணை குட்டைகள் அமைத்து கொடுக்கப்படும், தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை துறை அலுவலர்களை அணுகலாம் என்றார்.

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுண ஐயப்ப துரை, வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story