விவசாயிகளுக்கு பண்ணை பயிற்சி
கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கு பண்ணை பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் வயல்வெளி பண்ணை பயிற்சி கோத்தகிரி அருகே குன்னியட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார். வட்டார தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். முன்னோடி விவசாயி ராம்தாஸ் விதை தேர்ச்சி செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், டிரைகோடெர்மா விரிடி மூலம் ஐஸ்புரூக் நாற்று நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார். முன்னதாக பிரவீனா வரவேற்றார். பயிற்சியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் மணிமேகலா நன்றி கூறினார்.