பூட்டிய அறைக்குள் பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற கூட்டம்
பூட்டிய அறைக்குள் பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
திண்டுக்கல்
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் முருகேஸ்வரி மணிகண்டன் தலைமையில் நடந்தது. உள்பக்கமாக பூட்டிய அறைக்குள் பேரூராட்சி கூட்டம் நடந்தது வியப்பை ஏற்படுத்தியது. அதாவது கவுன்சிலர்கள் வரும்போது மட்டும் கதவு திறக்கப்பட்டது. அவர்கள் உள்ளே சென்றதும் மீண்டும் கதவு பூட்டு போட்டு பூட்டப்பட்டது.
காலை 11 மணிக்கு தொடங்கிய பேரூராட்சி மன்ற கூட்டம் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. மேலும் வீட்டு வரி, குடிதண்ணீர் வரி செலுத்த வந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் பூட்டியிருந்ததை பார்த்து விட்டு திரும்பி சென்றனர். எனவே இனிவருங்காலத்தில் இதுபோன்று அறையை பூட்டி விட்டு பேரூராட்சி மன்ற கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story