கஞ்சா சாகுபடி செய்த விவசாயி கைது
கல்வராயன்மலையில் கஞ்சா சாகுபடி செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணிஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் கல்வராயன் மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொட்டாவளவு கிராமத்தில் உள்ள பருத்தி வயலில், கஞ்சா சாகுபடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 1 கிலோ 500 கிராம் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது. விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயியான குப்புசாமி மகன் பூச்சி (வயது 40) என்பவரது வயலில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story