தோட்டத்தில் சுருக்கு கம்பி வைத்த விவசாயி கைது


தோட்டத்தில் சுருக்கு கம்பி வைத்த விவசாயி கைது
x

தோட்டத்தில் சுருக்கு கம்பி வைத்த விவசாயி கைது

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே மந்தாடா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தேயிலை தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலியானது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஊட்டி வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட தேனாடுகம்பை பிரிவில் மந்தாடா, பேரின்பவிலாஸ் பகுதியில் விவசாய தோட்டத்தின் ஓரத்தில் சுருக்கு கம்பிகள் மற்றும் பூச்சி கொல்லி மருந்து தடவிய வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு இடத்திற்கு சென்ற வனத்துறையினர், தோட்டத்து உரிமையாளரான விவசாயி சுந்தரம் என்பவரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தோட்டங்களில் யாராவது சுருக்கு கம்பி அமைத்திருந்தால் உடனடியாக அதை அகற்ற வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story